×

தெருவில் குப்பை வீசியவர்களுக்கு அபராதம்

ஆவடி:ஆவடி மாநகராட்சியில் தெருக்களில் குப்பைகளை எரிப்பது, வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட வணிக நிறுவனங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து 17,650  அபராதம்  விதித்தனர்.  ஆவடி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணைவிதிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறையில் உள்ளன. மேற்கண்ட விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவிதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையை உடனுக்குடன் வங்கியுடன் இணைக்க ‘‘மொபைல் செயலி’’ மூலமாக வசூலிக்க மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று சுகாதார ஆய்வாளர்கள் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தெருக்களில் குப்பைகளை வீசுவது, எரிப்பது உள்ளிட்ட செயல்களை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதன்படி, மேற்கண்ட செயல்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ₹17,650 அபராதம் விதித்தனர்.  மேலும், அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் மோகன்  தெரிவித்துள்ளனர்.


Tags : street , Garbage, fine
× RELATED பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு